https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/25/original/karona.JPG

நோயைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி பெறும் நம்பிக்கை எங்களுக்கு உண்டு:சீனா

by

உலக சுகாதார அமைப்பு அறிவித்த புதிய ரக கரோனா வைரஸ் பாதிப்பு சர்வதேச பொதுச் சுகாதார அவசர நிலை என்பது பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவாசுன்யிங் அம்மையார் ஜனவரி 31ஆம் நாள் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அவர் கூறுகையில், இந்த நோய் தாக்கிய பின், சீன அரசு மக்களின் உடல்நலத்தை முன்னிலையில் வைத்து  மிகவும் முழுமையான மற்றும் கடுமையான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நோயைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் வெற்றி பெறுவோம் என்பதில் முழு நம்பிக்கையையும் ஆற்றலையும் சீனா முற்றிலும் கொண்டுள்ளது என்று கூறினார்.

அதே வேளையில், நோய் நிலைமை பற்றிய தகவல்களை சீனா வெளிப்படையாக உடனுக்குடன் தொடர்புடைய தரப்புகளிடம் வெளிப்படுத்தி வருகிறது. இதை, உலக சுகாதார அமைப்பு மற்றும் பல நாடுகள் வெகுவாகப் பாராட்டியுள்ளன என்றும் அவர் கூறினார்.

சீனா, உலக சுகாதார அமைப்பு மற்றும் பல்வேறு நாடுகளுடன் இணைந்து, உலக மற்றும் பிரதேச பொதுச் சுகாதாரப் பாதுகாப்பைக் கூட்டாகப் பேணிக்காக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!