https://s3.amazonaws.com/adaderanatamil/1580448149-corona-virus-2.jpg

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 124 பேர் குணமடைந்துள்ளனர்

சீனாவில் புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 124 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன் காரணமாக மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த வைரஸ் தொற்றால் பாதிப்படைந்த நோயாளர்கள் வெற்றிகரமாக சிகிச்சை பெற்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் வுஹான் நகரில் இருந்தே குறித்த வைரஸ் பரவியதாக தெரிவிக்கப்படும் நிலையில் தற்போது அங்கு 124 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவில் நோய் தொற்றுக்கு இலக்கான 4 ஆவது மற்றும் 5 ஆவது நோயாளர்கள் இருவரும் இவ்வாறு குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவர்கள் நிமோனியா காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தத்தமது வீடுகளுக்கு திரும்பியுள்ள இவர்கள் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடதக்கது.