https://s3.amazonaws.com/adaderanatamil/1580445914-Laksambarg-2.jpg

லக்சம்பர்க் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

லக்சம்பர்க் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜீன் அசெல்பேர்ன் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அவர் நேற்று (30) இரவு நாட்டை வந்தடைந்ததாக அததெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

அவரை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க வரவேற்றுள்ளார்.

அவர் இன்றைய தினம் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை சந்தித்த பின்னர் நாட்டில் இருந்து பயணமாகவுள்ளார்.