சுதந்திர தின ஒத்திகை - கொழும்பின் சில வீதிகளுக்கு இன்று பூட்டு
72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படவுள்ளன.
இந்த முறை சுதந்திர தின வைபவம் எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒத்திகை நிகழ்வுகளை கருத்திற்கொண்டு இந்த விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய முதலாவது ஒத்திகை நிகழ்வு இன்று (31) இடம்பெறவுள்ளன.
இந்த ஒத்திகை நடவடிக்கை காலை 8.30 இல் இருந்து பிற்பகல் 1 மணிவரை இடம்பெறவுள்ளன.
முடப்படவுள்ள வீதிகள் குறித்த தெளிவுபடுத்தல் படங்களில்...