“கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கிட்டயே வராது.. அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்”.. மிகுதியாகப் பகிரப்படும் அறிவிப்பு போர்டு – மின்முரசு
திருவண்ணாமலை: “கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்கணுமா… சின்ன வெங்காயம் ஊத்தப்பம் சாப்பிடுங்க” என்று நோட்டீஸ் போர்ட்டில் எழுதி வைத்துவிட்டார்கள்.
உலகமெங்கும் கொரோனா வைரஸ் பீதியை கிளப்பி வருகிறது.. இன்னும் மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.. சித்த மருந்து முதல் ஒவ்வொன்றை பலர் குறிப்புகளாக சொல்லி வருகிறார்கள். எனினும் எதுவுமே உறுதிப்படுத்தப்படவில்லை.
அதற்குள் 213 பேருக்கு மேல் சீனாவில் இறந்துவிட்டனர்… 8 ஆயிரத்துக்கு மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் அதிக அளவில் இந்த வைரஸுக்கு பலியாகி உள்ளனர். சீனாவில் ஆரம்பித்து.. டெல்லியில் நுழைந்து கேரளா வழியாக திருவண்ணாமலை வரை இந்த வைரஸ் துரத்தி கொண்டு வந்துவிட்டது.
இந்நிலையில், காரைக்குடியில் பிரசிடென்ட் என்ற ஹோட்டலில் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், “கொரோனா வைரஸ் வராமல் தடுக்க சின்ன வெங்காய ஊத்தப்பம் சாப்பிடவும்” என்று எழுதி வைத்துள்ளனர். இது சம்பந்தமாக ஹோட்டலின் நிறுவனர், ஒரு டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் “நாங்க 65 வருஷமா இந்த ஹோட்டலை நடத்திட்டு வர்றோம்.. சின்ன வெங்காயம் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி மருந்தாகும்…
![https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/corona-virus22222-1580461150.jpg https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/corona-virus22222-1580461150.jpg](https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/corona-virus22222-1580461150.jpg)
15 நாள் தனி அறையில் சோதனை.. கடும் கட்டுப்பாடு.. சீனாவின் வுஹனிலிருந்து இன்று இந்தியா வரும் 400 பேர்
அதேபோல நல்லண்ணெய்யிலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. ஆனால் இந்த அருமை இப்போ இருக்கிற இளைஞர்களுக்கு தெரியவில்லை.. அவர்களுக்கு விழிப்புணர்வு தருவதற்காகத்தான் இப்படி ஒரு போர்டை வைத்தோம்.. சின்ன வெங்காயம் நிறைய சாப்பிட்டாலே எந்த வைரஸும் நம்மை தாக்காது” என்கிறார்.
Source: OneIndia
vikram
Post navigation
இந்திய ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால் உலக விருதுக்கு தேர்வு2.62 கோடி வேலைகள் உருவாக்கம்..Indian Economic survey-ல் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!
Related Posts
![https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/indianbusiness-1580465071.jpg https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/indianbusiness-1580465071.jpg](https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/indianbusiness-1580465071.jpg)
Indian Economic survey: 1.24 லட்சம் நிறுவனங்கள்.. இந்தியா 3-வது இடம்..!
murugan Jan 31, 2020 0 comment
![https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/g_arrow-824.jpg https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/g_arrow-824.jpg](https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/g_arrow-824.jpg)
“கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கிட்டயே வராது.. அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்”.. மிகுதியாகப் பகிரப்படும் அறிவிப்பு போர்டு
vikram Jan 31, 2020Jan 31, 2020 0 comment
![https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/g_arrow-823.jpg https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/g_arrow-823.jpg](https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/g_arrow-823.jpg)