வரவு செலவுத் திட்டம் 2020: வரவு செலவுத் திட்டத்தில் கவனிக்கபட வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன..! – மின்முரசு

 

 

டெல்லி: மிக மிக பரப்பாக பேசப்பட்டு வரும் பட்ஜெட் சம்பந்தமான சமாச்சாரங்களுக்கிடையில், நாளை மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கிறார்.

நாடெங்கிலும் உள்ள மக்கள் மிக ஆவலோடு எதிர் நோக்கியிருக்கும் இந்திய பட்ஜெட்டில், என்னென்ன விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும். அதை பற்றித்தான் பார்க்க போகிறோம்.

நாட்டில் நிலவி வரும் மந்த நிலையிலும், பலவீனமான வரி வருவாய், சொத்து விற்பனையிலிருந்து கிடைக்கும் நிதி பலவீனம் என பலவற்றுடன் மோடி அரசு போராடி வருகிறது. ஆக முதலீட்டு திட்டங்களுக்காக தேவையான நிதியை இந்திய ரிசர்வ் வங்கியை நாடவும் மத்திய அரசு முயன்று வருகிறது.

இந்த நிலையில் நாளைய பட்ஜெட்டில் நாம் முக்கிமாக கவனிக்கப்பட வேண்டிய முதல் விஷயம் நிதிபற்றாகுறை. அரசு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தனது நிதி பற்றாக்குறை இலக்கினை இழக்கும் நிலையில் உள்ளது. ப்ளூம்பெர்க் கணக்கெடுப்பில் பொருளாதார வல்லுனர்கள், அடுத்த ஆண்டு நிதி பற்றாக்குறை இலக்கினை ஜிடிபியில் 3.5% ஆக விரிவுபடுத்தலாம் என்றும் கணித்துள்ளனர். இந்த நிலையில் நிபுணர்கள் நடப்பு ஆண்டில் வளர்ச்சி 5% ஆக இருக்கும் என்றும், அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 6 – 6.5% இருக்கும் என்றும் கணித்துள்ளனர்.

அடுத்ததாக நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் கடன். பரந்த நிதிப்பாற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கம் நிச்சயம் கடன் வாங்குவதை அதிகரிக்கும். இது நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் 7.1 ட்ரில்லியனை ரூபாயை விட அதிகமாக இருக்கும். அடுத்த நிதியாண்டில் 7.8 ட்ரில்லியன் ரூபாய்க்கு மேலாக பத்திர விற்பனை இருக்கும் என்றும் ப்ளும்பெர்க் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இதற்கு அடுத்து வருவாய். பொருளாதாரத்தில் நிலவி வரும் மந்த நிலையை போக்க, முதலீடுகளை அதிகரிப்பதற்கான நிறுவனங்களுக்கு வரி சலுகை இருக்கலாம். இதனால் அரசுக்கு கிடைக்கும் வருவாய் குறையும்.

நடப்பு நிதியாண்டில் அரசின் வரி வருவாய் இலக்கினை அரசு 16.5 டிரில்லியன் ரூபாயாக வைத்துள்ள நிலையில், இதில் 2.1 டிரில்லியன் ரூபாய் வீழ்ச்சி இருக்கலாம் என்றும் ஐசிஐசிஐ வங்கி கணித்துள்ளது. இதனால் வரவிருக்கும் பட்ஜெட்டில் வரி குறைப்பு இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். இதற்கடுத்து வரி வருவாய். இப்படி முக்கியமான அறிவிப்புகள் இருக்கிறதா என்பதையும் நாம் பார்க்க வேண்டிய முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க Get Latest News alerts. You have already subscribed

Source: Goodreturns

https://secure.gravatar.com/avatar/c78300fab31b0f0459ea70f75dfa173e?s=100&d=mm&r=g

murugan

Post navigation

2.62 கோடி வேலைகள் உருவாக்கம்..Indian Economic survey-ல் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு கொடுங்க: திமுக மாநாட்டில் …3 நிமிட வாசிப்புசட்டமன்றத் தேர்தலில் இளைஞரணிக்கு அதிக இடங்களை வழங்க வேண்டுமென உதயநிதி வேண்…

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/g_arrow-824.jpg

“கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கிட்டயே வராது.. அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்”.. மிகுதியாகப் பகிரப்படும் அறிவிப்பு போர்டு

vikram Jan 31, 2020Jan 31, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/g_arrow-823.jpg

அன்முன்பதிவு அனுமதிச்சீட்டு, பருவம் அனுமதிச்சீட்டு புக் பன்றது ரொம்ப ஈஸி.. ‘யுடிஎஸ் ஆப்’. குறித்து தெற்கு தொடர்வண்டித் துறை

vikram Jan 31, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/capture-jpg-1-780x500.jpg

ரசிகர்களை ஏமாற்றிய சந்தானம்-யோகிபாபு கூட்டணி… இப்படியா “டகால்டி” வேலை காட்டுவது..?

Kundralan M Jan 31, 2020Jan 31, 2020 0 comment