பிஎஸ்என்எல் மூடுவிழாவா?- பிஎஸ்என்எல் ஊழியர்கள் 78,000 பேர் ஒரே நாளில் குட்-பை
by Karthick Mபிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்கள் 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று ஒரே நாளில் விருப்ப ஓய்வு பெறுகின்றனர். இதனால் அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை பாதியாக குறையவுள்ளது.

புதிய விருப்ப ஓய்வு திட்டம்
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம், தற்பொழுது ஒரு புதிய விருப்ப ஓய்வு திட்டத்தை தனது ஊழியர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் படி சுமார் 1 லட்சம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு தேர்வு செய்து, ஓய்வு பெற்றுக்கொள்ளலாம் என்று பிஎஸ்என்எல் நிர்வாகம் அறிவித்தது.

பிஎஸ்என்எல் பற்றிய வதந்திகள்
இந்தியாவின் டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடப் போகிறார்கள் என்றும், தனியாருக்கு விற்கப் போகிறார்கள் என்றும் பல வதந்திகள் பரவலாகப் பரவி வந்தது. ஆனால் அப்படி எதுவும் நடக்கப்போவதில்லை என்று உறுதிப்படத் பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

நவீனமயமாகும் பிஎஸ்என்எல்
அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சுமார் 74,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருக்கிறது. ஆகையால் இதை விற்பதற்கோ அல்லது மூடப்படுவதற்கோ வாய்ப்பே இல்லை என்று தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக பிஎஸ்என்எல் நிறுவனத்தை நவீனப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசு எடுத்துள்ளதாகக் கூறப்பட்டது.

தஞ்சை குடமுழுக்கு விவகாரம்: 1000ஆண்டு ரகசியம்-எந்த மொழியில் யாகம் நடக்கிறது?சிந்தித்து தலைநிமிர்வோம்

சுமார் 1 லட்சம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம்
இம்முறையின் படி தனது ஊழியர் எண்ணிக்கையைக் குறைக்கவும் பிஎஸ்என்எல் திட்டமிட்டு, புதிய விருப்ப ஓய்வு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி சுமார் 1 லட்சம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்றுக்கொள்ளலாம் என்றும், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கணிப்புப்படி சுமார் 77,000 ஊழியர்கள் இத்திட்டத்தை ஆதரிப்பார்கள் என்றும் தெரிவித்திருந்தது.

75,000 ஊழியர்கள் முன்னதாகவே தயார்
இந்த புதிய திட்டம் ஜனவரி 31-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது, இதற்கான முன்பதிவும் துவங்கிவிட்டது. பிஎஸ்என்எல் நிறுவனம் கணித்தது போல் இதுவரை சுமார் 75,000 ஊழியர்கள் இந்த விருப்ப ஓய்வு திட்டத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர். இதனால் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சுமார் 7,000 கோடி ரூபாய் சம்பளச் செலவுகள் மிச்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகவலைதளங்களில் ஆபாச கருத்துக்கள் பதிவு: இரும்புகரம் கொண்டு அடக்க உத்தரவு- எந்த மாதிரி கருத்துக்கள்

விருப்ப ஓய்வு திட்டத்திற்கு ஏற்றவர்கள் யார்?
இந்த புதிய விருப்ப ஓய்வு திட்டத்தை ஊழியர்கள் தேர்வு செய்வதற்கும் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 03, 2019-க்குள் விருப்ப ஓய்வு பெற விரும்பும் ஊழியர்கள் முன்பதிவு செய்திருக்க வேண்டும், 50 வயதைக் கடந்த அனைத்து நிரந்தர ஊழியர்களும் இந்த விருப்ப ஓய்வு திட்டத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம் என்று பிஎஸ்என்எல் நிர்வாகம் அறிவித்தது.

78 ஆயிரத்து 569 பேர் இன்று விருப்ப ஓய்வு
மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிவரும் நிலையில் அதன் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆயிரக்கணக்கானோர் நிறுவனத்தில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 786 பேர் பணியாற்றிய நிலையில் 78 ஆயிரத்து 569 பேர் இன்று விருப்ப ஓய்வு பெறுகின்றனர்.
Most Read Articles

நோக்கியா 5.2 ஸ்மார்ட்போனின் விவரங்கள் கசிந்தது: நான்கு ரியர் கேமரா.! முழுவிவரங்கள்.!

BSNL: வெறும் ரூ.78-க்கு தினசரி 3ஜிபி டேட்டா வழங்கி அதிரடி காட்டிய பிஎஸ்என்எல்.! வெறுப்பில் ஜியோ.!

போலி., போலி., போலி: பேஸ்புக் நிறுவனம் அதிரடி., இதை பேஸ்புக் பக்கத்தில் இருந்து உடனடியாக நீக்குங்கள்!

சத்தமில்லாமல் நாள் ஒன்றுக்கு 5ஜிபி டேட்டா வழங்கு பிஎஸ்என்எல்-ன் பலே திட்டம்.! இது தெரியாம போச்சே

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்1 மாடல் நிறுத்தப்படுகிறது.

BSNL: தினமும் 3ஜிபி டேட்டா 436 நாட்களுக்கு வேண்டுமா? அப்போ இதுதான் சரியான திட்டம்!

சரியாக 6மாதங்களில் களமிறங்கும் வாட்ஸ்ஆப் பே! ஜுக்கர்பெர்க்.!

BSNL Marutham Prepaid Plan அடுச்சது 'லக்', ஆனா கொஞ்சம் சேதாரமும் இருக்கு!

அட்டகாச லுக்: இணையத்தில் கசிந்த சாம்சங் பிளிப் போன் புகைப்படம் மற்றும் சிறப்பம்சங்கள்

BSNL:திடீரென 4மாதங்கள் வரை இலவச சேவையை அறிவித்த பிஎஸ்என்எல்.! வாடிக்கையாளர்கள் உற்சாகம்.!

சாலைகுழிகளை தவிர்த்து செல்ல செயலி! பாதுகாப்பான பயணம்..

BSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.! அதிரடி சலுகை.!
Best Mobiles in India

ஒப்போ F15
19,990

விவோ V17
22,390

ரியல்மி X2 ப்ரோ
28,959

விவோ S1 ப்ரோ
19,890

சாம்சங் கேலக்ஸி A70s
25,899

ஒன்பிளஸ் 7T
34,942

ஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்
1,06,900

ரியல்மி XT
15,640

ஒப்போ ரெனோ2
36,990

ஹுவாய் P30 ப்ரோ
71,990

ரியல்மி X2
16,969

ரியல்மி X2 ப்ரோ
28,959

விவோ U20
10,990

விவோ S1 ப்ரோ
19,890

சாம்சங் கேலக்ஸி M30s
12,999

ரெட்மி நோட் 8 ப்ரோ
14,894

நோக்கியா 7.2
14,500

ஆப்பிள்ஐபோன் 11
63,900

ஒன்பிளஸ் 7T
34,942

ஆப்பிள்ஐபோன் XR
47,799

போகோ F2 லைட்
20,000

ஆல்கடெல் 1B (2020)
4,800

ஆல்கடெல் 1V (2020)
6,400

ஆல்கடெல் 1S (2020)
8,000

கூல்பேட் Legacy 5G
28,300

சாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ
35,430

ரியல்மி C2s
3,210

ஆல்கடெல் 3L (2020)
11,250

ஒப்போ A8
12,000

ஒப்போ A91
20,580