http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_29_Jan_678722560405732.jpg

புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாம்பசிவம்(35) என்ற பிரமுகர் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி, கிருமாம்பாக்கத்தில் காரில் சென்று கொண்டிருந்த சாம்பசிவம் மீது மர்மநபர்கள் வெடிகுண்டு வீசியுள்ளனர். தீப்பற்றி எரிந்த காரிலிருந்து இறங்கிய சாம்பசிவத்தை மர்மகும்பல் ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டிக்கொலை செய்தது.