வரவு செலவுத் திட்டம் 2020: உள்கட்டமைப்பு துறையில் முதலீடுகள் அதிகரிக்குமா.. எதிர்பார்ப்புகள் என்ன? – மின்முரசு

 

 

இந்திய பொருளாதாரம் மிக மந்தமான சூழ்நிலையில் இருக்கும் இப்படி ஒரு சூழலில், நாட்டின் அனைத்து துறைகளும் குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சி கண்டுள்ளன.

சொல்லப்போனால் ஆட்டோமொபைல், உள்கட்டமைப்பு, உற்பத்தி துறை, கட்டுமானத் துறை, வேலையின்மை என அனைத்திலும் வீழ்ச்சி தான்.

இப்படி ஒரு சூழலில், பிப்ரவரி 1 அன்று நிர்மலா சீதாராமன் தனது இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு துறையில் என்ன எதிர்பார்ப்புகள் இத்துறையினரிடையே நிலவி வருகிறது என்பதை பற்றித் தான் பார்க்கப்போகிறோம்.

ஒரு புறம் மத்திய அரசு வீழ்ச்சியை சரி செய்யவும், இந்திய பொருளாதாரத்தினை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வரவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் உள்கட்டமைப்பு துறையில் முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் ஏதேனும் நடவடிக்கைகள் இருக்குமா?

மத்திய அரசின் முக்கிய வருவாயாக கருதப்படும் வரி வசூல் குறைந்துள்ளதால், வரியில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை என்றாலும், பொருளாதார சுழற்சியை ஏற்படுத்த மத்திய அரசு உள்கட்டமைப்பு துறைகளில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்ற முக்கிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/economy-india-moneycontrol-1580456942-1.jpg

Indian Economic survey என்றால் என்ன..? யார் தயாரிக்கிறார்கள்..!

குறிப்பாக ரயில்வே, விமானம், சாலைகள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யப்பட வேண்டும். இதே போல் கிராமப்புறங்களில் உள்ள ஏரிகள் குளங்கள் போன்றவை தூர் வாருதல், கிராமப்புற சாலைகளை செப்பணிடுதல், இதன் மூலம் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பினையும் அதிகரிக்க முடியும். மக்களின் வருவாயும் அதிகரிக்கும். வருவாய் அதிகரித்தால் தேவையும் அதிகரிக்கும். இதனால் உற்பத்தி துறையும் வளர்ச்சி பெறும். இது சங்கிலி தொடர் போல, ஒவ்வொரு துறையும் இதனால் ஊக்கம் பெரும் என்றும் கூறப்படுகிறது.

ஆக அரசு உள்கட்டமைப்பு துறைகளில் முதலீடு செய்வதன் மூலம் அரசு பெரிய அளவில் வருவாயை பெருக்க இது வழிவகை செய்யும். ஆக இதுபோன்ற ஊக்க நடவடிக்கைகள் பட்ஜெட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மத்திய அரசு தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில், பெரிய அளவிலான நிதி ஒதுக்கப்படுமா என்பது சந்தேகமான விஷயமாக இருந்தாலும், குறைந்த பட்சம் தனியார் முதலீடுகள், அன்னிய முதலீடுகளை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க Get Latest News alerts. You have already subscribed

Source: Goodreturns

https://secure.gravatar.com/avatar/c78300fab31b0f0459ea70f75dfa173e?s=100&d=mm&r=g

murugan

Post navigation

குரூப்-4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கு: சிபிசிஐடி பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவுமத்திய வரவு செலவுத் திட்டம் 2020 LIVE BREAKING NEWS: நாளை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/79816-780x400.jpg

தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி

Sneha Suresh Jan 31, 2020Jan 31, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/budget-2020-live-1580457374-1.jpg

மத்திய வரவு செலவுத் திட்டம் 2020 LIVE: நாளை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

murugan Jan 31, 2020Jan 31, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/investments2-1561532781-1580457095-1.jpg

வரவு செலவுத் திட்டம் 2020: உள்கட்டமைப்பு துறையில் முதலீடுகள் அதிகரிக்குமா.. எதிர்பார்ப்புகள் என்ன?

murugan Jan 31, 2020 0 comment