திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜியின் சென்னை வீட்டிற்கு காவல் துறை சீல் – மின்முரசு
சென்னை: சென்னை மந்தவெளியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா 2011-ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்த போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி. அந்த காலகட்டத்தில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சுமார் 16 பேரிடம் இருந்து 95 லட்சம் பணத்தை அவர் வாங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மெட்ரோபாலிட்டன் சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற சென்னை போலீஸார் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இதையடுத்து கரூரில் உள்ள ராமேஸ்வரபட்டியில் அவரது வீட்டிலும், அலுவலகத்திலும் சென்னை போலீஸார் ரெய்டு நடத்தினர். மேலும் அவரது ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்திலும் ரெய்டு நடத்தினர்.

பழைய கேஸை கிளறிய சென்னை போலீஸ்.. எம்எல்ஏ செந்தில் பாலாஜியின் வீட்டில் ரெய்டு ஏன்? பரபரக்கும் கரூர்
இந்த நிலையில் சென்னை மந்தவெளியில் அவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு தனிப்படை போலீஸார் சென்றனர். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் வீடு பூட்டியிருந்தது. இதையடுத்து வீட்டை சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸார் திறப்பதற்கு முன்னர் அவரது வீட்டு கதவை வேறு யாரும் திறந்துவிடக் கூடாது என்பதற்காக நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுவிட்ட போலீஸார் அந்த வீட்டிற்கு தற்காலிகமாக சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Source: OneIndia
vikram
Post navigation
வீட்டில் இருந்தும் தடுக்கவில்லையே.. பரூக்காபாத் குற்றவாளியின் மனைவியை அடித்து கொன்ற ஊர்மக்கள்!எவரெஸ்ட் பிரிமீயர் லீக்கில் விளையாடுகிறார் கிறிஸ் கெய்ல்
Related Posts

தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி
Sneha Suresh Jan 31, 2020Jan 31, 2020 0 comment

மத்திய வரவு செலவுத் திட்டம் 2020 LIVE: நாளை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
murugan Jan 31, 2020Jan 31, 2020 0 comment
