ராமாயணத்தில் லாஜிக்கே இல்லை; மிஷ்கின் பரபரப்பு – மின்முரசு
மிஷ்கின் இயக்கிய “சைக்கோ” திரைப்படம் சென்ற வாரம் திரைக்கு வந்தது. இத்திரைப்படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், சிலர் லாஜிக்கே இல்லை என விமர்சித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் வால்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மிஷ்கின், இந்த விமர்சங்களுக்கு பதிலளித்தார். அதில்,
”ராமாயணத்திலே எந்த லாஜிக்கும் இல்லை, இன்னொருவரின் மனைவியை தூக்கிச் சென்ற மோசமானவனான ராவணனுடன், மனைவியை மீட்க சண்டை போடுகிறான் ராமன். ராவணனும் சண்டை போடுகிறான். விபீஷ்ணன் ராமனோடு இணைகிறான். சாப்பாடு போட்டு தன் உடலை வளர்த்த ராவணனோடு எப்போதும் இருப்பேன் என கும்பகர்ணன் கூறுகிறான். ராமனிடம் சாகப்போவதை தெரிந்துக்கொண்டும் கும்பகர்ணன், அண்ணனுடன் சேர்ந்து மடிந்து போகிறான். இதில் எந்த லாஜிக்கும் இல்லை” என கூறியுள்ளார்.
சைக்கோ திரைப்படத்தில் பல கொலைகளை செய்யும் “சைக்கோ” கதாப்பாத்திரத்தை மன்னிப்பது போல் படம் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Webdunia.com
Ilayaraja
Post navigation
யாரும் வெளியில் இருக்க விம்ப மாட்டார்கள்: ஒருநாள் போட்டி குறித்து உமேஷ் யாதவ் சொல்கிறார்வீட்டில் இருந்தும் தடுக்கவில்லையே.. பரூக்காபாத் குற்றவாளியின் மனைவியை அடித்து கொன்ற ஊர்மக்கள்!
Related Posts
தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி
Sneha Suresh Jan 31, 2020Jan 31, 2020 0 comment
மத்திய வரவு செலவுத் திட்டம் 2020 LIVE: நாளை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
murugan Jan 31, 2020Jan 31, 2020 0 comment