குடியுரிமை திருத்தச் சட்டம் வரலாற்று சிறப்புமிக்கது – ஜனாதிபதி பேச்சு – மின்முரசு
அயோத்தி வழக்கின் தீர்ப்பில் பொதுமக்கள் காட்டிய முதிர்ச்சி பாராட்டுக்குரியது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், பாராளுமன்ற இரு சபைகளின்
கூட்டுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்’ என்ற குறளை மேற்கோள் காட்டி ஜனாதிபதி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
புதிய அரசின் முதல் 7 மாதங்களில் பல முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாட்டு மக்களின் உணர்வுகளை எம்.பி.க்கள்
நாடாளுமன்றத்தில் பிரதிபலிப்பது அவசியம். அயோத்தி வழக்கு தீர்ப்பில் பொதுமக்கள் காட்டிய முதிர்ச்சி பாராட்டுக்குரியது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது லடாக் மற்றும் காஷ்மீரின் சமவளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.
போராட்டங்கள் என்ற பெயரில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களினால் நாட்டுக்கும், சமூகத்தினருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் வரலாற்று சிறப்பு மிக்க சட்டம் ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை சிறப்பு மிக்க சட்டம் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியதற்கு எதிர்க்கட்சிகள் அவையில் முழக்கம்
எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Source: Maalaimalar
murugan
Post navigation
சீனாவில் உள்ள தமிழர்களை மீட்கக்கோரிய வழக்கு : மத்திய, மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிநீதி மன்றம் மதுரை கிளை உத்தரவுவிக்ரம் படத்தில் இருந்து சர்ச்சை நடிகர் நீக்கம்
Related Posts
மத்திய வரவு செலவுத் திட்டம் 2020 LIVE: நாளை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
murugan Jan 31, 2020Jan 31, 2020 0 comment
வரவு செலவுத் திட்டம் 2020: உள்கட்டமைப்பு துறையில் முதலீடுகள் அதிகரிக்குமா.. எதிர்பார்ப்புகள் என்ன?
murugan Jan 31, 2020 0 comment