டெல்லியில் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் கைது
புதுடெல்லி: டெல்லியில் பழைய போலீஸ் தலைமை அலுவலகம் முன் ஜாமியா பல்கலை கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலை கழக வளாகத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை டெல்லி போலீஸ் கைது செய்தது.