கரோனா வைரஸ்: உலக சுகாதார அமைப்பு அவசர நிலை அறிவிப்பு
by DINகரோனா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு உலகளாவிய அவசரநிலையை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. மேலும் சீனாவுக்கான சர்வதேசப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த எந்தக் காரணமும் இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் நோய் தொற்று பாதிப்பு சீனாவை அடுத்து உலக நாடுகளிலும் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகளவிலான சுகாதார அவசரநிலை ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அவசரநிலை சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
இதனால், ஒவ்வொரு நாடும் தனது எல்லைகளை மூடுவது, விமானங்களை ரத்து செய்வது, விமான நிலையங்களுக்கு வரும் நபர்களைத் தீவிரமாக கண்காணிப்பது அல்லது பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக தீர்மானிக்க முடியும்.