http://img.dinakaran.com/samayalnew/S_image/sl52699007518446.jpg

பனானா மிக்ஸ் கோகோநட் பேன் கேக்

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு-200 கிராம்              
தேங்காய்த்துருவல் - 3
மேஜைக்கரண்டி    
கனிந்த வாழைப்பழம் - 1    
பொடித்த பனங்கற்கண்டு-  1 மேஜைக்
கரண்டி    
நெய் - தேவையான அளவு  
ஸ்ட்ராபெர்ரி  - 3    
உப்பு - 1 சிட்டிகை
பால் -  50 மி.லி. (ஆறிய பால்)
தேன் - 2 டீஸ்பூன்.

செய்முறை

மிக்ஸியில் தேங்காய்த்துருவல், தேன், கனிந்த வாழைப்பழம், பொடித்த பனங்கற்கண்டு, ஸட்ராபெர்ரியுடன் பாலைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு அகலமானப் பாத்திரத்தில் கோதுமை மாவைச் சேர்க்கவும். இதனுடன் அரைத்த விழுதைச் சேர்க்கவும். அளவானத் தண்ணீர், உப்பைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். பேனைச் சூடு செய்து, கரைத்து வைத்த மாவை ஒரு கரண்டிச் சேர்த்து நெய்யைச் சேர்த்து, இருபுறமும் திருப்பிப் போட்டுச் சுவையான பனானா மிக்ஸ் கோகோநட் பேன் கேக் தயார். குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பார்கள்.

குறிப்பு

* நெய்யிற்குப் பதில் தேங்காய் எண்ணெயைச் சேர்க்கலாம். * பாலுக்குப் பதில் பாதாம் பாலைச் சேர்க்கலாம். *  பேன் கேக் மேல் தேனைச் சேர்த்து
சாப்பிடலாம்.