சப்பாத்தி சில்லி
தேவையான பொருட்கள்
சப்பாத்தி-3
பொரிய வெங்காயம் - 1
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பெங்களூர் தக்காளி -1
சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய குடை
மிளகாய் - 1\4 கப்
பொடியாக நறுக்கிய கேரட் - 1\4 கப்.
செய்முறை
கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின்பு, பொடியாக நறுக்கிய பெங்களூர் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். மிளகுத்தூள், சீரகப்பொடி, கரம் மசாலாவைச் சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய குடைமிளகாய், கேரட் சேர்க்கவும். மிக்ஸியில் சிறு துண்டுகளாக்கியச் சப்பாத்தியைச் சேர்த்து ஒரு சுற்று ஓட்டவும். பொடித்த சப்பாத்தியை வதக்கிய கலவையுடன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். போதுமான உப்பைச் சேர்த்துப் பிரட்டவும். நறுக்கிய கறிவேப்பிலையை சேர்த்து மிக்ஸ் செய்யவும். டொமேடோ சாஸ் (அ) தயிரைச் சேர்த்து குழந்தைகளுக்கு சாப்பிடத்
தரவும்.