http://img.dinakaran.com/samayalnew/S_image/sl52699007518444.jpg

பாலக் பூரி

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு-1 கப்             
உப்பு -  தேவையான அளவு  
பாலக்கீரை - 150 கிராம்
சீரகம் -  1/2 டீஸ்பூன்
இஞ்சி -   1/2 இன்ச் அளவு
எண்ணெய் - தேவையான அளவு.
 

செய்முறை

ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, சீரகம், உப்பைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். கழுவிய பசலைக்கீரையை நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் கீரை, இஞ்சித் துண்டைச் சேர்த்து அரைக்கவும். அரைத்த கலவையை வடித்து கோதுமை மாவில் சேர்த்து மிக்ஸ் செய்து மாவை மிருதுவாகப் பிசையவும். சிறுசிறு உருண்டைகள் செய்து, பூரி போல் தேய்த்து எண்ணையில் பொரிக்கவும். குழந்தைகள் விரும்பி உண்ணும் பாலக் புரியைக் காய்கறி குருமாவுடன் பேக் செய்யவும்.

குறிப்பு

* கீரை விரும்பி உண்ணாத குழந்தைகளுக்கு பூரியாய் செய்துக் கொடுக்கலாம். * கேரட், பீட்ரூட் சாற்றையும் மாவுடன் சேர்த்து பூரி சுடலாம்.