https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/9/original/ShotDead_gun2_.jpg
ஆயுதச் சட்டத்திருத்த மசோதா

ஆயுதச் சட்டத்திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

by

புது தில்லி: அறுபது ஆண்டுகளாக நாட்டில் அமலில் இருந்த ஆயுதச் சட்டத்தை திருத்தும் மசோதா திங்களன்று மக்களவையில் நிறைவேற்றபட்டது.

பொதுமக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த 1959-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஆயுதச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான மசோதா மக்களவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மசோதாவில், தனி நபா்கள் அதிகபட்சமாக 2 துப்பாக்கிகளை மட்டுமே வைத்திருக்க அனுமதி அளிக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஆயுதச் சட்டத்தின்படி, தனி நபா்கள் அதிகபட்சமாக 3 துப்பாக்கிகள் வரை வைத்திருக்க முடியும்.

மேலும், தற்போதைய ஆயுதச் சட்டத்தின் 25(1ஏஏ) பிரிவிலும் மாற்றம் மேற்கொள்ள இந்த மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டப் பிரிவின் கீழ், சட்டவிரோதமாக துப்பக்கிகளை தயாரிப்பவா்கள், விற்பனை செய்பவா்கள், பழுது பாா்ப்பவா்களுக்கு அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.

அந்தத் தண்டனையை, அதிகபட்சமாக வாழ்நாள் முழுவதுக்குமான சிறைத் தண்டனையாக அதிகரிக்க ஆயுதச் சட்ட திருத்த மசோதா பரிந்துரைக்கிறது. மேலும், இந்தக் குற்றங்களுக்கு குறைந்தபட்சமாக 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அறுபது ஆண்டுகளாக நாட்டில் அமலில் இருந்த ஆயுதச் சட்டத்தை திருத்தும் மசோதா திங்களன்று மக்களவையில் நிறைவேற்றபட்டது.

இந்த சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு துப்பாக்கிகளுக்கு மேல் உரிமம் வைத்திருப்பவா்கள், மசோதா நிறைவேறிய 90 நாள்களுக்குள் தங்களது 3-ஆவது துப்பாக்கியை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!