https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/19/original/education_logo.jpg

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது!

by

கரூா்: பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தின் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இன மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகளில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ , மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக மாணவா் ஒருவருக்கு ரூ. 2 லட்சம் வரை முதற்கட்டமாக 100 பேருக்கு வழங்கப்பட உள்ளது.

தகுதிகள்: தமிழ்நாட்டைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவியா்கள். பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயில வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேற்படி கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பம் குறித்த தகுதி மற்றும் விருப்பமுள்ள மாணவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள, முதல் தளம், அறை எண் 108-ல் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!