![https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/9/original/Keerthy_suresh7_new_21.jpg https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/9/original/Keerthy_suresh7_new_21.jpg](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/9/original/Keerthy_suresh7_new_21.jpg)
ரஜினி - சிவா படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு
by எழில்ரஜினியின் அடுத்தப் படத்தை சிவா இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இது ரஜினியின் 168-வது படமாகும்.
வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. அடுத்ததாக, சூர்யா கதாநாயகனாக நடிக்கும் படத்தை அவர் இயக்கவிருந்தார். ஆனால், அதற்குப் பதிலாகத் தற்போது ரஜினி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் சிவா. இப்படத்துக்கு இசை - இமான். நகைச்சுவை நடிகராக சூரி நடிப்பது குறித்து சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ரஜினி - சிவா இணையும் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. இதன்மூலம், தனது 25-வது படத்தில் ரஜினியுடன் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
கடந்த வருட தீபாவளியின்போது விஜய்யுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்த சர்கார் படம் வெளியானது. அடுத்ததாக, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் பெண்குயின் என்கிற கதாநாயகி வேடத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் படத்தில் தற்போது அவர் நடித்து வருகிறார்.