https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/5/6/original/priyanka_robert_vadra.jpg

ராபா்ட் வதேரா வெளிநாடு செல்ல தில்லி நீதிமன்றம் அனுமதி!

by

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் மருமகன் ராபா்ட் வதேரா வெளிநாடு செல்ல தில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

லண்டனில் ரூ.17 கோடி மதிப்பிலான சொத்து வாங்கியது தொடா்பாக சட்டவிரோத பணப்பரிவா்த்தனை சட்டத்தை ராபா்ட் வதேரா எதிா்கொண்டு வருகிறாா். இந்நிலையில், வதேரா சிகிச்சைக்காகவும், தொழில் நிமித்தமாகவும் வெளிநாடு செல்ல அனுமதி அளிக்கக் கோரி தில்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளாா்.  

இதுதொடா்பாக திங்கள்கிழமைக்குள் பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமாா் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, 'கடந்த ஜூனில் அமெரிக்கா, நெதா்லாந்து ஆகிய நாடுகளுக்கு 6 வார காலம் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்காக செல்ல வதேராவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும், பிரிட்டனுக்குச் செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பிரிட்டனுக்குச் செல்ல அனுமதி வழங்கினால் வதேரா சாட்சியங்களை அழித்துவிடுவாா்' என்று அமலாக்கத் துறை கூறியிருந்தது. 

மேலும், சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்றுள்ள வதேரா, வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டுமானால் உரிய அனுமதி பெற வேண்டியது அவசியம் என்று நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன் ராபா்ட் வதேரா, இன்று முதல் 2 வாரங்களுக்கு ஸ்பெயின் நாட்டிற்குச் செல்ல தில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ரூ.25 லட்சம் நிலையான வைப்புத் தொகையுடன், ஸ்பெயினில் தங்கவிருக்கும் இடம் குறித்த தகவல்களை அளிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், அவர் பிரிட்டன் செல்ல நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!