https://s3.amazonaws.com/adaderanatamil/1575893780-lindula-2.jpg

5 மாதங்களின் பின்னர் தோண்டி எடுக்கப்பட்ட சடலம்

லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லிந்துலை நோனா தோட்டத்தில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் (09) தோண்டி எடுக்கப்பட்டதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் புபுது ஜயசேகர முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டதாக லிந்துலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

24.07.2019 அன்று குறித்த நபர் சுகயினம் காரணமாக இறந்ததாக கூறி தோட்ட பகுதியில் உள்ள மையானத்தில் சடலம் புதைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறி, கடந்த 8 ஆம் மாதம் 8 ஆம் திகதி மரணித்தவரின் மருமகன் நடராஜ் ரமேஸ் என்வரால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய 5 மாதங்களின் பின்னர் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்ட்டுள்ளது.

கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் 22.08.2019 முறைபாடு பதிவு செய்யபட்டதன் காரணமாக, முறைபாடு செய்யபட்ட மருமகன் மற்றும் மரணித்தவரின் குடும்பஸ்த்தினர் அனைவரையும் நுவரெலியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திற்கு வரவழைக்கபட்டு விசாரணைகள் மேற்கொள்ளபட்டன.

இதற்கமைய நுவரெலியா நீதிமன்ற நீதவானின் உத்தரவிற்கு அமைய இன்று குறித்த சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.

தற்போது குறித்த நபர் மரணிப்பதற்கு முன்பு தான் கைபட எழுதிய கடிதம் ஒன்றையும் மீட்டுள்ளனர்.

குறித்த கடிதத்தில் தான் மரணித்தால் அதற்கு காரணம் தனது மனைவி என எழுதபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே, சம்பவ இடத்திற்கு நுவரெலியா தடவியல் பொலிஸார் மற்றும் சிரேஷ்ட வைத்திய நிபுணர் கே.ஜி.சி.எஸ். சந்ரதாச ஆகியோர் தலைமையில் மரண விசாரணைகள் இடம்பெற்று, சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டது.

சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-மலையக நிருபர் சதீஸ்குமார்-