2020 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷியாவுக்குத் தடை
by எழில்2020 ஒலிம்பிக் மற்றும் 2022 கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்க ரஷியாவுக்குத் தடை விதித்துள்ளது உலக ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (வாடா).
ஊக்க மருந்து சர்ச்சையில் ரஷியா சிக்கியதை அடுத்து 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவ்விரு போட்டிகளிலும் ரஷியாவின் தேசிய கீதமும் கொடியும் அனுமதிக்கப்படாது.
ஊக்க மருந்து சோதனையில் தேர்ச்சியடையும் ரஷிய விளையாட்டு வீரர்கள், பொதுவான கொடியுடன் போட்டிகளில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.