https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/9/original/Sonia_Birthday_Greetings.jpg
சோனியா காந்தி பிறந்தநாள்

சோனியா பிறந்தநாள்: திமுக எம்.பிக்கள் நேரில் வாழ்த்து

by

புது தில்லி: காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாவின் பிறந்த நாளையொட்டி திமுக எம்.பிக்கள் அவருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி திங்களன்று தனது 73-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதேபோல திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தனது ட்விட்டர் பக்கத்தில்  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் சோனியா பிறந்த நாளையொட்டி திமுக எம்.பிக்கள் அவருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

இதுதொடர்பாக திமுக தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில், இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் திருமதி. சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாளான இன்று (9.12.2019), புதுடெல்லியில், திருமதி சோனியாகாந்தி அம்மையாரை நேரில் சந்தித்த திராவிட முன்னேற்றக் கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஹைதராபாத், உன்னாவ் உட்பட நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலைகள் அதிகரித்து வருவதன் காரணமாக சோனியா, தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என்று ஞாயிறன்றே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!