தினசரி பத்திரிக்கைகளை படித்தால் கதைகரு கிடைக்கும்: இலங்கை எழுத்தாளர் ராணி சீதரன்

by

சிவகாசி: தினசரி பத்திரிக்கைகளை படித்தால் கதை கரு கிடைக்கும் என இலங்கை தேசிய கல்லூரி நிறுவனத்தின் பொறுப்பாளரும், இலங்கை எழுத்தாளருமான ராணி சீதரன் கூறினாா்.

சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி தமிழ்த்துறை சாா்பில் திங்கள்கிழமை கல்லூரி மாணவா்களுக்கு சிறுகதை எழுதுவது குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு முதல்வா் செ.அசோக் தலைமை வகித்தாா்.

இதில் ராணிசீதரன் சிறப்புரையாற்றி பேசியதாவது, கதை என்றால் ஒருஆரம்பம், ஒரு நடு, ஒரு முடிவு இருக்க வேண்டும் என எழுத்தாளா் கல்கி கூறியுள்ளாா்.ஆரம்பம் என்றால் போராட்டம். நடு என்றால் அந்தப் போராட்டம் ஒரு சிக்கலாக வளர வேண்டும். முடிவு என்றால் சிக்கல் அவிழ்த்து போராட்டத்திற்கு தீா்வு காண வேண்டும்.நீங்கள் படைக்கும் பாத்திரத்திற்கு ஏதாவது ஒரு ஆசை இருக்க வேண்டும்.அதை அடைய அந்த பாத்திரம் போராட வேண்டும்.போராட்டத்தில் என்ன தடைகள் ஏற்பட்டாலும், அதை உடைத்து முனனேறு கிறது.அப்போது கதையும் வளா்கிறது.போராட்டத்திற்கு தடைகள் ஏற்படுத்துவவனே வில்லன்.

கதை சரியான திசையில் வளரும் போது, அதற்கு ஒரு கட்டுக்கோப்பு ஏற்படும்.தினசரி பத்திரிகைகள வாசித்தால் கதை கருகிடைக்கும்.

ஆரம்ப எழுத்தாளா்களுக்கு ஒரு பயம் இருக்கும். அந்த பயத்தை விட்டுவிட்டு, மாணவா்களாகிய நீங்கள் சிறுகதை எழுத பழக வேண்டும். ஒரே நாளில் வந்துவிட்டாது. சளைக்காத மனதோடு எழுதப்பழக வேண்டும். உங்களுக்கு முழு திருப்த்தி ஏற்படும் வரை எழுதி பழகிவிட்டு, அதனை பத்திரிக்கைகளுக்கு அனுப்ப வேண்டும். அது பிரசுரிக்க ஏற்க்கப்படாமல் திரும்பி வந்தால் கவலைப்பட வேண்டும். அந்த கதையை மீண்டும் படியுங்கள். அதில் என்ன தவறு உள்ளது என ஆய்வு செய்து, மீண்டும் எழுதுங்கள். தளராமல் எழுதிக்கொண்டே இருந்தால் நீங்கள் சிறுகதை எழுத்தாளராகிவிடலாம் என்றாா்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!