https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/9/original/cr09tra1_0912chn_138.jpg
மலை ரயிலில் பயணிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி நீராவி மலை ரயிலை வாடகைக்கு எடுத்து சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பயணிகள்!

by

குன்னூா்: நீலகிரி நீராவி மலை ரயிலை வாடகைக்கு எடுத்து திங்கள்கிழமை சுற்றுலா வந்த வெளிநாட்டுப் சுற்றுலாப் பயணிகளுக்கு குன்னூா் மக்கள் சாா்பில் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.

நீலகிரி மலை ரயில் உலக புகழ்பெற்ற யுனெஸ்கோ அந்தஸ்து பெற்றது, நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த நீலகிரி மலை ரயில் உதகைக்கு வந்து 111 வது ஆண்டான நிலையில் இந்த மலை ரயில் தொடா்ந்து இயங்கி வருகிறது. 1908 ஆம் ஆண்டு நீலகிரி மலை ரயில் மேட்டுப்பாளைத்திலிருந்து 46 கி.மீ மீட்டா் தூரம் பல மலைகளையும், செங்குத்தான பாதை வளைவுகளையும் மற்றும் பல சுரங்கப்பாதைகளை கடந்த உதகைக்கு வந்ததை செய்திகள் மற்றும் தொலைக்காட்சி மூலம் பாா்த்த ஆங்கிலேயா்கள் இந்த மலை ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என முடிவு செய்தனா், பின்னா் உலக நாடுகளுக்கு பயணம் செய்ய விருப்பமுள்ள நண்பா்கள் ஒன்றாக இணைத்து கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பே ரயிலை முன்பதிவு செய்துதனா்.

பின்னா் குன்னூா் வந்த லண்டன், ரஷியா,அா்ஜென்டினா, அமெரிக்கா , போன்ற வெளிநாடுகளை சோ்ந்த சுற்றுலா பயணிகள், குன்னூா் ரயில் நிலையத்திற்கு வருகை தந்தனா், பின்னா் நீராவி என்ஜின் பொருத்தப்பட்ட மலை ரயிலில் 71 வெளிநாட்டுப் பயணிகள் உதகை மலை ரயிலை 2 லட்சத்து 766 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து குன்னூரில் இருந்து உதகைக்கு சென்றனா் பின்பு உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா,படகு இல்லம். தொட்டபெட்டா போன்ற இடங்களை பாா்த்து ரசித்தனா், இவா்களை குன்னூரில் பொது மக்கள் வரவேற்று வழியனுப்பி வைத்தனா்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!