குழப்பத்தில் சுமந்திரன்:மறதிக்கு வைத்தியமாம்?

by
https://1.bp.blogspot.com/-X_8AZcoJm70/Xe54MB11HYI/AAAAAAAAM-0/RoZmRqioJaMay94mTFHyplpEFQMeXDSSwCNcBGAsYHQ/s1600/MP-MA-Sumanthiran-_850x460_acf_cropped.webp

புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியாவிட்டால் பதவி விலகுவேன் என கூறியது உண்மையான விடயம்தான்.இன்றும் நான் அவ்வாறான நிலைப்பாட்டிலேயே இருக்கிறேன். ஆனால் மற்றவர்களுக்காக பதவி விலகமாட்டேன் என புதிய விளக்கமொன்றை கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தற்போது தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்கவிட்டால்  பதவி விலகுவதாக எம்.ஏ.சுமந்திரன் கூறிய கருத்து தொடர்பாக பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

குறிப்பாக கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சியின் சுமந்திரன் தரப்பினது தன்னிச்சையான போக்கிற்கு எதிராக பங்காளிக்கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் ஆகியன போர்க்கொடி தூக்கியுள்ளன.தேவையெனில் கூட்டிலிருந்து வெளியேறவும் அவை முடிவு செய்துள்ளன.  

இந்நிலையில் விளக்கமளித்துள்ள எம்.ஏ.சுமந்திரன் ஐனநாயக ரீதியிலான சூழலில் எவருக்கும் எத்தகைய கருத்துக்களையும் முன்வைக்க முடியும். ஆகையினாலே அதனை பொருட்படுத்தாது அந்தச் சவால்களையும் நாங்கள் சந்தித்து முன்னேற வேண்டும்.

சிறிலங்கா பொதுஐன முன்னணியை சார்ந்த சிலர் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக கூறியிருக்கிறார்கள்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முற்றாக கைவிடப்பட்டது என்று இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. புதிய அரசியலமைப்பு உருவாக்க முடியாமல் போனால் பதவி விலகுவேன் என்று தான் ஏற்கனவே கூறியிருக்கிறேன்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் கைவிடப்படும் என்ற தீர்மானம் எட்டப்படுகின்ற நேரத்தில் தான் பதவி விலகுவதாக எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.