கூடிய ஊழல் செய்தது யார்:மாநகரசபையில் போட்டி!
by டாம்போஈ.பி.டி.பி கட்சியின் ஒத்துழைப்பு இல்லாமல் உங்களால் யாழ்.மாநகர முதல்வராகியிருக்க முடியுமா? என முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா எழுப்பிய கேள்வியால் யாழ்.மாநகரசபையின் சிறப்பு அமர்வு இன்று களேபரமாகியுள்ளது.
யோகேஸ்வரி பற்குணராசாவின் கருத்தை தொடர்ந்து மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் ஈபிடிபி ஆட்சியிலிருந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்த மோதல் உச்சம் பெற்றிருந்தது.
இதனையடுத்து கூட்டமைப்பு சார்பு உறுப்பினர்களிற்கும்;, ஈபிடிபி கட்சி சார்பு உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது.
அப்போது இமானுவேல் ஆர்னோல்ட்டினால் கொள்வனவு செய்யப்பட்ட மடிக்கணணி எங்கேயென யோகேஸ்வரி பற்குணராசா வினா எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த இமானுவேல் ஆர்னோல்ட் அலுவலகத்திற்கு என கொள்வனவு செய்து வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட குளிரூட்டி எங்கே, சபைக்கு செலுத்த வேண்டிய 6 இலட்சம் ரூபா பணம் இதுவரை செலுத்தாமல் இருப்பதற்கான காரணம் என்ன போன்ற கேள்விகளை முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணத்தை நோக்கி எழுப்பியிருந்தார்.
நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் பெரும்பான்மை பெறாத கூட்டமைப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆட்சி கதிரையேறுவதை தடுக்க ஈபிடிபியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.