வெள்ளம் காரணமாக மட்டக்களப்பு கடற்கரையில் ஒதுங்கும் கழிவுப்பொருட்கள்

by

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உள்ளூர் நீரோடைகளின் ஊடாக பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ஏனைய கழிவுப் பொருட்கள் அதிகளவு கடலில் கலப்பதினால் கடல் வளத்தில் பாதிப்பு ஏற்படுவதுடன், கடற்கரை பிரதேசமும் மாசுப்படுவதாக பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த பொருட்கள் கடலில் இருந்து மாவட்டத்தின் பல்வேறுபட்ட கடற்கரை பிரதேசங்களில் கரை ஒதுங்குவதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், தமது சூழலை பாதிப்படையச் செய்வதாகவும் பிரதேசவாசிகள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கிழக்கின் சுற்றுலா தளமாக விளங்கும் பாசிக்குடா, கல்குடா, வாகரை பிரதேசத்தின் காயான்கேணி, மாங்கேணி, பணிச்சங்கங்கேணி, பால்சேனை போன்ற கடற்கரையை அண்மித்த பிரதேசங்களில் பல்வேறு வகையான பிளாஸ்ரிக் பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளன.

கிழக்கில் தற்போது பெய்து வரும் அடை மழை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், அவை கடற்கரையை அசுத்தமடையச் செய்து அழகை இல்லாமல் செய்துள்ளது.

கடலில் கலக்கப்படும் குறித்த பொருட்களை கடல் வாழ் உயிரினங்கள் உணவாக உட்கொள்வதனால் அவை உயிரிழப்பதுடன், கடல் சூழல் அசுத்தமடைதல் அதனை தொடர்ந்து கடல் உணவுகளை மனிதன் உணவாக உண்பதனால் பல்வேறுபட்ட நோய்களை எதிர்நோக்கும் சாத்தியம் உள்ளதாகவும் பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் கடற்கரையோர கழிவுப் பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன், அவை கடல், ஆறு மற்றும் குளம் போன்ற நீர் நிலைகளில் கலக்காத வகையில் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

https://dimg.zoftcdn.com/s1/photos/news/sites/full/12/po_lythee00/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg
https://dimg.zoftcdn.com/s1/photos/news/sites/full/12/po_lythee001/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg
https://dimg.zoftcdn.com/s1/photos/news/sites/full/12/po_lythee002/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg
https://dimg.zoftcdn.com/s1/photos/news/sites/full/12/po_lythee003/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg
https://dimg.zoftcdn.com/s1/photos/news/sites/full/12/po_lythee004/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg
https://dimg.zoftcdn.com/s1/photos/news/sites/full/12/po_lythee006/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg
https://dimg.zoftcdn.com/s1/photos/news/sites/full/12/po_lythee007/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg
https://dimg.zoftcdn.com/s1/photos/news/sites/full/12/po_lythee008/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg