சுவிஸ் தூதரக சம்பவம் - 2 வது நாளாக பெண் அதிகாரி CID யில் ஆஜர்
கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி 2 ஆவது நாளாக தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் குறித்த பெண் அதிகாரி நேற்று (08) மாலை முதல் தடவையாக வாக்குமூலம் வழங்க ஆஜராகியிருந்தார்.
அவருடன் சுவிஸ் தூதரக உத்தியோகத்தர் மற்றும் 2 சட்டத்தரணிகளும் சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய குறித்த சுவிஸ் தூதரக அதிகாரியிடம் சுமார் 5 மணித்தியாலங்கள் வரை வாக்குமூலம் பெறப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாக்குமூலம் பெற்றுக்கொண்ட பின்னர் அவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நீதிமன்ற வைத்தியரிடம் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி கடந்த 25 ஆம் திகதி தனது அலுவலக பணிகளை நிறைவு செய்து வீடு திரும்பும் போது கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
இதேவேளை, சுவிட்சர்லாந்து குறித்த பெண்ணிற்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.