http://cinema.dinakaran.com/Karan_img/gallery/Kollywood-news-16300154510.jpg

டிச.12 முதல் சென்னை சர்வதேச திரைப்பட விழா

17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, வரும் 12 முதல் 19ம்  தேதி வரை  சென்னையில் நடக்கிறது. இதில் நடிகர் சாருஹாசனுக்கு வாழ்நாள்  சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. 12ம் தேதி மாலை 5 மணிக்கு கலைவாணர் அரங்கில் விழா தொடங்குகிறது. அன்று கான் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருது பெற்ற பாராஸைட் என்ற கொரிய மொழி படம் திரையிடப்படுகிறது. உலக சினிமா பிரிவில் ஜெர்மனி, ஹங்கேரி, அமெரிக்கா,  பெல்ஜியம், பிரேசில், ஈரான், இஸ்ரேல், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வெளியான 95 படங்கள்  திரையிடப்படுகிறது.

சென்னையில் தேவி, தேவி பாலா, அண்ணா, கேசினோ, ரஷ்ய கலாச்சார மையம், என்.எப்.டி.சி தியேட்டர்களில் படங்கள் திரையிடப்படுகின்றன. 7 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு கொண்ட தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவில் திரையிட அடுத்த சாட்டை, அசுரன், பக்ரீத், ஹவுஸ் ஓனர், ஜீவி, கனா, மெய், ஒத்த செருப்பு சைஸ் 7, பிழை, சீதக்காதி, சில்லுக் கருப்பட்டி, தோழர் வெங்கடேசன் ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.