![https://s3.amazonaws.com/adaderanatamil/1575885011-bun-2.jpg https://s3.amazonaws.com/adaderanatamil/1575885011-bun-2.jpg](https://s3.amazonaws.com/adaderanatamil/1575885011-bun-2.jpg)
பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரி தயாரிப்புகளின் விலை 10% குறைப்பு
ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரித் தயாரிப்புக்களின் விலைகளை 10 சதவீதத்தினால் குறைக்குமாறு பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன அனைத்து பேக்கரி உரிமையாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கு முன்னர், 17 சதவீதமாக இருந்த வற் வரி டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் குறைக்கப்பட்டது. இதன் பலன்களின் ஒரு பகுதி பாவனையாளர்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர், 10 இலட்சம் ரூபாவாக அறவிடப்பட்ட வரித்தொகை தற்போது 2 கோடி 50 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 99 சதவீதமான பேக்கரி உரிமையாளர்கள் வற் வரியிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன எமது நிலையத்திற்கு தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)