பாடும் மணல்!
நன்றி குங்குமம் முத்தாரம்
இன்று சீனாவின் அடையாளமாகவே மாறிவிட்டது ஜியாங்ஷவான் பாலைவன ரிசார்ட். வடக்கு சீனாவில் உள்ள இந்த சொகுசு விடுதிதான் சீனாவின் முதல் பாலைவன ரிசார்ட். பாலைவனத்தில் தாமரை மலர்ந்திருப்பதைப் போல இதன் தோற்றம் அசத்துகிறது. விடுதியைச் சுற்றிலும் இருக்கும் மணல்மேடுகள்தான் இங்கே ஸ்பெஷல்.
காற்று வேகமாக அந்த அவற்றின் மீது மோதும்போது ரம்மியமான சத்தத்தை அவை எழுப்புகின்றன. அந்தச் சத்தம் பறவையின் ஹம்மிங் போலவும், சில நேரம் சிங்கத்தின் கர்ஜனை போலவும் இருக்கின்றது. அதனால் இதை பாடும் மணல் என்று அழைக்கின்றனர். அதனால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் ஜியாங்ஷவானை மொய்க்கிறது.