https://s3.amazonaws.com/adaderanatamil/1575880724-SL-Navy-2.jpg

இலங்கை கடற்படையின் 69 வது ஆண்டு விழா இன்று

இலங்கை கடற்படை தனது 69 வது ஆண்டு விழாவை இன்று (09) கொண்டாடுகின்றது. இதனை முன்னிட்டு கடந்த சில நாட்களாக, தொடர்ச்சியான சமூக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி கடந்த 07 ஆம் திகதி நடைபெற்றது. அச்சுவேலி ‘Convent Our Lady of Lanka’ குழந்தைகள் இல்லம் சுத்தம் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாலுமிகள் பங்கேற்றனர். குழந்தைகள் இல்லத்தின் ஊழியர்களால் குறித்த பணி பெரிதும் பாராட்டப்பட்டது.

மேலும், திருகோணமலை கடற்படை வைத்தியசாலையில் (கிழக்கு) 2019 டிசம்பர் 07 ஆம் திகதி இரத்த தான திட்டமொன்று நடைபெற்றது, அங்கு ஏராளமான மாலுமிகள் தானாக முன்வந்து இரத்த தான நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும், இலங்கை கடற்படையின் 69 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் நேற்று (08) மற்றும் இன்று (09) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க ´ தலதா மாளிகை முன் கிலன்பசவுடன் புத்த பூஜை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

(அரசாங்க தகவல் திணைக்களம்)