https://s3.amazonaws.com/adaderanatamil/1575882246-switzerland-2.jpg

கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டுள்ள சுவிஸ் பெண் அதிகாரி

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணிற்கு ​வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இன்று நீடிக்கப்பட்டது.

இந்த மனு இன்று (09) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணி முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பிரதான நீதவான், குறித்த பெண்ணை கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி அவர் தாக்குதலுக்கோ அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கோ முகங்கொடுத்துள்ளாரா என்பது தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும், தற்போது அவர் ஏதேனும் மன அழுத்தத்தில் உள்ளாரா என்பது தொடர்பிலும் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, குறித்த பெண் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் இன்று முற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.