http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2019_Dec_05__66646754741669.jpg

கீதா ரோபோ!

நன்றி குங்குமம் முத்தாரம்

நீங்கள் எங்கே சென்றாலும் உங்களைப் பின்தொடர்ந்து ஒரு நாய்க்குட்டியைப் போல உடன் வருகிறது கீதா ரோபோ. ‘பியாஜ்ஜியோ’ என்ற நிறுவனம் வடிவமைத்திருக்கும் டெலிவரி ரோபோ இது. சுமார் 18 கிலோ வரையிலான எடையுள்ள பொருட்களை இதனால் சுமந்து வர முடியும். நீங்கள் எப்படி செல்கிறீர்களோ அதே வழியில் இதனால் வரமுடியும்.

ஆனால், மணல் மீதோ, சேறிலோ, பனிக்கட்டியின் மேலோ பயணிக்க முடியாது. அதிகபட்சமாக மணிக்கு 22 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது கீதா. மூன்று மணிநேரம் சார்ஜ் செய்தால் எட்டு மணிநேரம் இடைவிடாமல் வேலை செய்யும். மளிகைப்பொருட்கள் வாங்கி வீட்டுக்குக் கொண்டு வர ஏதுவானது இந்த ரோபோ. வாகனங்களைப் போல இதனை பார்க் செய்யும் வசதியும் உண்டு. இப்போது விற்பனைக்கு வந்துவிட்டது கீதா.