http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2019_Dec_05__536647975444794.jpg

தலைக்குக் குளிக்க மெஷின் வந்துவிட்டது!

நன்றி குங்குமம் முத்தாரம்

இங்குள்ள படங்களைப் பார்த்தவுடன் ஏதோ சயின்ஸ் ஃபிக்ஸன் படத்தில் வரும் காட்சி என்றோ அல்லது ரோபோ என்றோ நினைப்பீர்கள். ஆனால், அதுதான் இல்லை.இது தலைக்குக் குளிப்பதற்காக கண்டு பிடிக்கப்பட்ட ஒரு மெஷின். இப்படி ஒரு மெஷினை வடிவ மைத்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்ததோடு, புலம்பவும் வைத்திருக்கிறார் சீனா வைச் சேர்ந்த செங் காங்கே.

உடலின் மீது நீர் விழாமல் ஹேர் வாஷ் மட்டும் செய்து ஆச்சர்யப்படுத்துகிறது இந்த மெஷின். வேண்டாம் என்று தூக்கி வீசப்பட்ட பொருட்களை வைத்தே இதைச் செய்திருக்கிறார் செங்.

ஹெல்மெட் தான் இதன் முக்கிய மூலப்பொருள். இதில் நவீன மோட்டாரைப் பொருத்தி, தண்ணீர்க் குழாயையும் ஷாம்பூ குழாயை யும்இணைத்திருக்கி றார். இதை நம் தலையில் மாட்டிக்கொண் டால் போதும்... சற்று நேரத்துக்கெல்லாம் தண்ணீர் வந்து கூந்தலை அலசும். பின்னர் ஹெல்மெட் முழுவதும் உள்ள சிறு சிறு குழாய்கள் வழியே ஷாம்பூ வெளிவந்து தலையெங்கும் சீராகப் பரவும்.

மோட்டார்கள் இயங்கி நுரை பொங்கச் செய்தபின், மீண் டும் தண்ணீர் வந்து அலசும். கடைசியாக டிரையர், வெப்பக் காற்றைப் பாய்ச்சி தலைமுடியைக் காய வைக்கும். இத்தனையையும் வெறும் 5 நிமிடங்களில் செய்து முடித்து நம் நேரத்தை மிச்சப்படுத்தும் இந்த மெஷினுக்குக்  காப் புரிமையும் கிடைத்துவிட்டது.

தவிர, மசாஜும் செய்கிறது இந்த மெஷின். பரிசோதனையின்போது பல முறை ஹெல்மெட் உடைந்துவிட்டது. 16 வருட சோதனைக்குப் பின்னே தலைக்குக் குளிக்க வைக்கும் மெஷின் தயாராகியிருக்கிறது. அப்படி தயாரான போது சோதனை செய்து பார்க்க யாரும் முன்வரவில்லை. கடைசியில் காங்கேயின் அப்பாவே தைரியமாக முன்வந்து, இதன் மூலம் பாதுகாப்பாக தலைக்குக் குளித்துக் காட்டியிருக்கிறார்.

காங்கேயின் பாட்டிக்கு பல நாட்களாக உடல் நிலை சரியில்லை. அவரைக் குளிப்பாட்டவே இந்த மெஷினைக் கண்டுபிடித்திருக்கிறார் காங்கே. பாட்டியைப் போல பலருக்கும் இது உதவும் என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை.