சிறப்புக்குரிய நட்புறவு நீடிக்க வாய்ப்பில்லை: வடகொரியா குறித்து டிரம்ப் ட்வீட்
by DINஅமெரிக்காவுடனான வடகொரியாவின் சிறப்புக்குரிய நட்புறவு நீடிக்க வாய்ப்பில்லை என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வடகொரியா முக்கிய அணு ஆயுதச் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. அமெரிக்காவுடனான சுமூக உறவு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக வடகொரியா கூறி வரும் நிலையில், இந்த அணு ஆயுதச் சோதனை சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில், வடகொரியாவுடனான சிறப்புகுரிய நட்புறவு நீடிக்க வாய்ப்பில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதேபோன்று தொடர்ந்து கிம் ஜோங் உன் மிகவும் புத்திசாலியாக இருக்கலாம். ஆனால், இதேபோன்று விரோதப் போக்குடன் செயல்பட்டால், அதிகம் இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா உடனான நட்புறவை இழக்க கிம் ஜோங் உன் தயாராக இல்லை. இருப்பினும் இருநாடுகளுக்கும் இடையே எதிர்காலத்தில் மாற்று செயல்திட்ட முறையை பின்பற்ற திட்டமிட்டுள்ளார் என வடகொரியாவின் பாதுகாப்பு அறிவியல் அகாதெமி தகவல் தெரிவித்துள்ளது.