https://s3.amazonaws.com/adaderanatamil/1575874080-Susil-2.jpg

கோப் அறிக்கைக்காக பாராளுமன்றம் ஒத்திவைக்கப் படவில்லை

பாராளுமன்றம் எதிர்வரும் மாதம் 03 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப் பட்டமையானது கோப் அறிக்கை தாக்கல் செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கத்திற்காக அல்ல என சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

மாலபே பிரதேசத்தில் நேற்று (08) பிற்பகல் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பிணை முறி சம்பவம் தொடர்பில் தற்போதைய நிலையில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பிரதான பிரதிவாதி இங்கு இல்லை எனவும் குறிப்பிட்டார்.

அவரை இந்நாட்டுக்கு கொண்டு வர வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என தெரிவித்த அவர், தடயவியல் தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜனவரி மாதம் 03 ஆம் திகதி பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு பாராளுமன்ற குழு உருவாக்கப்பட்ட பின்னர் அதில் இந்த அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.