கடலில் மூழ்கி காணாமல் போனவரின் சடலம் கண்டுபிடிப்பு
வெலிகம, கங்தூவ கடலில் மூழ்கி உயரிழந்த ஒருவரின் சடலம் இன்று (09) கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெலிகம, கங்தூவ கடலில் மூழ்கி நேற்று (08) காணாமல் போயிருந்த நபரை தேடும் பணிகள் கடற்படையால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதன்படி, காணாமல் போனவரின் சடலம் இன்று முற்பகல் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெலிகம, கங்தூவ கடலில் ஒருவர் நீரில் மூழ்கியதாக வெலிகம காவல்துறையினரினால் கடற்படைக்கு அறிவிக்கப்பட்டது.
அதன்படி, உடனடியாக, கடற்படை சுழியோடி குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பியது.
பலியானவரின் சடலம் சுழியோடி குழுவால் கண்டுபிடிக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக வெலிகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.