தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இலங்கைக்கு தென்கிழக்கே நிலவும் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி காரணமாக மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டது.