http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2019_Dec_05__694317042827607.jpg

புற்றுநோயை எளிதில் கண்டுபிடிக்க எம்.இ என்ற நவீன கருவியுடன் கூடிய மருத்துவமனை நாகர்கோவிலில் திறப்பு

கன்னியாகுமரி: மார்பக புற்றுநோயை எளிதில் கண்டறிவதற்கான எம்.இ என்ற நவீன மருத்துவமனை நாகர்கோவிலில் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக புற்றுநோயை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வெட்டூர்ணிமடம் பகுதியில் பெண்களுக்கான புற்றுநோய்களை கண்டறிவதற்காக எம்.இ என்ற நவீன மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை மருத்துவர்களான சிவா, வைஷ்ணவதேவி ஆகியோர் திறந்து வைத்தனர். இங்கு 3டி டைமோ சின்டஸிஸ் டிஜிட்டல் மெமோ கிராம் சிஸ்டம் எனும் புதிய கருவி நிறுவப்பட்டுள்ளது. வியாபர நோக்கில் இல்லாமல், சேவை நோக்கத்தோடு இந்த மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் நல்ல சிகிச்சை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. புற்றுநோய்க்கான அறிகுறி உள்ளதா? என்பதை கூட எம்.இ மருத்துவமனையில் உள்ள நவீன கருவி எளிதில் கண்டுபிடித்துவிடுகின்றது. மேலும் இந்த கருவி 3.7 நொடிகளில் புற்றுநோய் இருக்கும் இடத்தை ஸ்கேன் செய்யும் ஆற்றல் கொண்டது. 5 மில்லி மீட்டர் முதல் 6 மில்லி மீட்டர் வரையிலான புற்றுநோய் கட்டிகள் இருப்பதையும் இந்த நவீன கருவியால் எளிதில் கண்டுபிடிக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் எம்.இ மருத்துவமனை கன்னியாகுமரி மாவட்ட பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது.