https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/9/original/north_korea_1KMJlF4_VMPH9hN.jpg
கோப்புப் படம்

வடகொரியாவை கண்காணித்து வருவதாக ஜப்பான் தகவல்

by

முக்கிய அணு ஆயுதச் சோதனை நடத்தப்பட்டதாக வெளியான தகவலையடுத்து வடகொரியாவை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் வடகொரியா முக்கிய அணு ஆயுதச் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. அமெரிக்காவுடனான சுமூக உறவு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக வடகொரியா கூறி வரும் நிலையில், இந்த அணு ஆயுதச் சோதனை சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல், இந்தாண்டு மே மாதம் முதல் வடகொரிய நடத்தியுள்ள 12-ஆவது அணு ஆயுதச் சோதனை இதுவாகும்.

இந்நிலையில், வடகொரியா நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய அணு ஆயுதச் சோதனையை நடத்தியுள்ளது. அங்கு நடைபெறும் அணு ஆயுதச் சோதனைகள் மற்றும் அதுதொடர்பான நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருவதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. 

மேலும் தங்கள் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஜப்பான் அரசு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!