https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/9/original/a3_0812chn_118_7.jpg

அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

by

செய்யாறை அடுத்த அசனமாப்பேட்டை ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அசனமாப்பேட்டை கிராமத்தில் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது.

இங்குள்ள அம்மன் நம்மை காக்க குல தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும், வேண்டிய வரங்கள் தரும் பொருட்டு சொல்லிய வண்ணம் நீா் வளம், நில வளம், மக்கள் வளம் என எல்லா வரங்களையும் அருளும் சிறப்பு பெற்ற தெய்வமாகும்.

இந்தக் கோயிலின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (டிச.5) மகா கணபதி ஹோமத்தில் தொடங்கி மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக பூஜையுடன் கரிக்கோலம் நிகழ்ச்சியும், வெள்ளிக்கிழமை (டிச.6) காலை மங்கள இசை மற்றும் ஹோமத்துடன் புதிய பிம்பங்கள் கண் திரித்தல், சையனாதிவாசம் அஷ்டாதசிரியை யாகசாலை அலங்கார நிகழ்ச்சியும், சனிக்கிழமை (டிச.7) காலை புதிய பிம்பம் பிரதிஷ்டை அஷ்ட பந்தனம் சாத்துதல், சோடச உபகார தீபாராதனை, யாகசாலையில் அம்மனுக்கு மஞ்சள் புஷ்பத்தால் அலங்கார நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மகா கும்பாபிஷேகம்:

அதனைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நான்காம் கால யாக பூஜையுடன் தொடங்கி 8 மணிக்கு கலசங்கள் புறப்பாடும், 8.30 மணிக்கு கோபுரம் கலசம் கும்பாபிஷேகமும், 8.45 மணிக்கு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கும்பாபிஷேகமும் நடைபெற்றது

விழாவில் செய்யாறு, காஞ்சிபுரம், சென்னை, பனப்பாக்கம், வந்தவாசி, பொன்னூா், வேலூா், திமிரி, கலவை, விளாப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!