https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/9/original/timg_1.jpg

மேலை நாட்டு ஊடகங்களின் இரட்டை வரையறை

by

சின்ச்சியாங்கில் பயங்கரவாத எதிர்ப்பு நிலைமை தொடர்பாக சீன ஊடகக் குழுமம் அண்மையில் இரு ஆவணத் திரைப்படங்களை வெளியிட்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சமூக ஊடகங்கள் வழி இவற்றைப் பார்த்தவர்கள், சின்ச்சியாங்கில் கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் இழைத்த வன்முறை குற்றங்களைக் கண்டித்தனர். இத்தகைய மோசமான குற்றச் செயல்கள் தான் அமெரிக்க அரசு பாதுகாக்க வேண்டிய மனித உரிமையா என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

தீவிரவாத கருத்துக்களைப் பரவல் செய்தல், தேசிய இனங்களுக்கிடையில் பகைமையை ஏற்படுத்துதல், மகளிர் மற்றும் குழந்தைகளைக் கொலை செய்தல், பயங்கரவாத சம்பவங்களை நிகழ்த்துதல் ஆகியவை சீனாவுக்கு மட்டுமல்லாமல், உலகப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில் சில மேலை நாடுகளின் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் காது கேளாதது போல் செயல்படுவது மனித உரிமைத் துறையில் தெளிவான இரட்டை வரையறையை வெளிகாகாட்டும் செயலாகும். ஆனால், பயங்கரவாதிகளுக்கு இது தவறான தகவல் வழங்கும் என்பதில் ஐயமில்லை.

தகவல், சீன ஊடகக் குழுமம்

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!