http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2019_Dec_05__646999537944794.jpg

உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு

டெல்லி: உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது. திமுகவின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் நாளை மறுநாள் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகியோரும் உள்ளாட்சி தேர்தலை நடத்த எதிர்ப்பு தெரிவித்து முறையீடு செய்துள்ளனர்.