கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் முதலமைச்சர் எடியூரப்பா: 12 தொகுதிகளில் முன்னிலை
பெங்களூரு: கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா ஆட்சியை தக்க வைக்கிறார் என தெரிகிறது. கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. இதில் 12 இடங்களில் பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பான்மையை நிரூபிக்க 6 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ., உள்ளது. தற்போது பா.ஜ.,விடம் 105 எம்எல்ஏ.,க்கள் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க 112 எம்எல்ஏ.,க்கள் தேவை.