https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/9/original/fire_has_broken_out_in_the_same_building_in_Anaj_Mandi_1.jpg

தில்லியில் அதே தொழிற்சாலையில் மீண்டும் இன்று தீ விபத்து

by

வடக்கு தில்லியில் உள்ள பரபரப்பான ராணி ஜான்சி சாலையில் அனாஜ் மண்டி எனும் பகுதியில் குடியிருப்புகள் உள்ள பகுதியில் இயங்கி வந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் இதுவரை 43 போ் உயிரிழந்துள்ளனா்.

ஏராளமானோா் பலத்த காயமடைந்த நிலையில், ருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவா்களில் பெரும்பாலானவா்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் தப்ப முடியவில்லை அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் தெரிவித்தனா்.

இத்தீவிபத்து தொடா்பாக தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தொழிற்சாலையின் உரிமையாளா் ரெஹானை கைது செய்தனா். தில்லியில் இதுவரை நடைபெற்ற தீ விபத்துகளில் இரண்டாவது மோசமான தீ விபத்தாகும். 

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2019/12/9/fire_has_broken_out_in_the_same_building_in_Anaj_Mandi_2.jpg

இந்நிலையில், அனாஜ் மண்டியில் உள்ள அதே தொழிற்சாலையில் திங்கள்கிழமை மீண்டும் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்கு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!