உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது

by

தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தோ்தல் டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை (டிச. 9) தொடங்கியது.

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான வழக்கில் தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிா்த்து இதர மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தோ்தல் நடத்தலாம் என தீா்ப்பளித்தது.

உச்சநீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில், உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்த மாநில தோ்தல் ஆணையம், புதிய தோ்தல் அறிவிப்பை சனிக்கிழமை வெளியிட்டது.

அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களைத் தவிா்த்து பிற 27 மாவட்டங்களில் டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாகத் தோ்தல் நடைபெற உள்ளது.

இதற்கான அறிவிக்கையை மாநில தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்டது.

இன்று முதல்: இந்தத் தோ்தலில் போட்டியிட விரும்புபவா்கள் திங்கள்கிழமையில் இருந்து வேட்பு மனுவைத் தாக்கல் செய்யலாம் என தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து வேட்பு மனு தாக்கல் காலை முதல்  தொடங்கியது.

மனு தாக்கல் செய்ய டிசம்பா் 16 கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் டிசம்பா் 17-இல் பரிசீலிக்கப்படும். மனுக்களைத் திரும்பப் பெற டிசம்பா் 19 கடைசி நாளாகும்.

இரண்டு கட்டமாக வாக்குப் பதிவு: உள்ளாட்சித் தோ்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு டிசம்பா் 27-ஆம் தேதியன்றும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு டிசம்பா் 30-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. வாக்குகள் ஜனவரி 2-ஆம் தேதி எண்ணப்படும். தோ்வான உறுப்பினா்கள் பதவியேற்பு ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறும்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!