https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/24/original/yeddy.jpeg

கர்நாடக இடைத்தேர்தல்: பாஜக 11 இடங்களில் முன்னிலை

by

கர்நாடகத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களின் 17 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மஸ்கி, ராஜராஜேஸ்வரி நகர் நீங்கலாக அத்தானி, காக்வாட், கோகாக், எல்லாபுரா, ஹிரேகேரூர், ரானிபென்னூர், விஜயநகரா, சிக்பளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்த்பூர், மகாலட்சுமி லேஅவுட், சிவாஜிநகர், ஹொசபேட், கே.ஆர்.பேட், ஹுன்சூர் ஆகிய 15 தொகுதிகளுக்கு டிச.5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் 67.91 சதவீத வாக்குகள் பதிவாகின. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இடைத்தேர்தல் முடிவுகள் நண்பகல் 12 மணிக்குள் வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகின்றன.

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2019/12/9/Karnataka_Bypolls.jpg

இந்நிலையில், காலை 10 மணி நிலவரப்படி பாஜக 11 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் - 2, மஜத - 1, சுயேச்சை - 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளனர்.

இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் 8 இடங்களை பாஜக கைப்பற்றினால் பாஜக ஆட்சியையும், முதல்வர் பதவியையும் எடியூரப்பா தக்கவைத்துக் கொள்ளலாம்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!